தமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந்தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வணங்குவதற்கு ஓர் சமய ஒழுங்கு உண்டு. அந்த சாதனம் துணைநின்றால்  தான் சாத்தியத்தை எய்தமுடியும். நம் உள்ளங்களை ஒரு வழிப்படுத்த உதவும் ஒளிமாடமாகிய கோயில்களிற்கு நாள்தோறும் சென்று வழிபடவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் கோயில்களைஎழுப்பி பராமரித்து உபகரித்து வந்துள்ளனர். 

அந்த வகையிலே மண்டைதீவு என்னும் திவ்ய பதியிலே வீற்றிருந்து அருளாட்ச்சி புரியும் முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆலயமானது மூர்த்தி தலம் தீர்த்தம் என அனைத்தும் மிகசிறப்பாக முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டு சிறப்பான முறையிலே அந்தணசிவாச்சாரியார்களினால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது.
1909 ஆண்டு ஆடி 8 ஆம் திகதி கட்டுத்தேர் அமைக்கப்பட்டு முதலாவது வெள்ளோட்டம் இடம் பெற்றது இவ் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் மண்டைதீவு மக்களின் ஆன்மீக ஈடுபாட்டையும் பறைசாற்றி சான்றாக திகழ்கின்றது.
இக்கட்டுத்தேர் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

 இவ்ஆலயம் ஆரம்பத்தில் சிறிய கொட்டகையாக சுண்ணாம்பு கற்களால் அமைக்கப்பட்டு இருந்த ஆலயம்  பின்னர்  1940 ஆண்டு மகாகும்பாவிஷேகத்தின் போது கர்பக்கிரகத்தை புதிதாக அமைத்து மூலஸ்தானம் அர்த்தமண்ட பம் வரை வயிரக்கற்களால் கட்டபட்டது.  1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு பஞ்சாட்சரம் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்ட பின்னர் மகாமண்டபம் தம்பமண்டபம் ஆகியவற்றோடு கோயில் முகப்பு வாயில் வரை கட்டப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு மகா கும்பாவிஷேகம் நடத்தப்பட்டது.  

அதன் பின்னர்  ஊர்மக்கள் மற்றும் திருவிழா உபயகாரர்கள் பங்களிப்புடனும் மணிக்கூட்டு கோபுரம் சுற்றுமதில் கட்டப்பட்டது.  
உள்நாட்டு யுத்த காலப்பகுதி 2002  ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆலயம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

 • இக்காலப்பகுதியில் வசந்த மண்டபம் யாகசாலை பிள்ளையார் நவக்கிரகம் வயிரவர் பரிகாரங்கள் அமைக்கப்பட்டது. 
 • கோபுரவாயில் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டது.
 • சுண்ணாம்புகற்களால் அமைக்கப்பட்ட பழைய மடப்பள்ளி அறை வாகன அறை களஞ்சிய அறை குருக்கள் அறை முற்றாக உடைக்கப்பட்டு அத்திவாரத்தில் இருந்து புதிதாக கட்டபட்டு கொட்டகை வேலை செய்யப்பட்டது. 
 • புதிதாக சித்திர தேர் அமைக்கப்பட்டு  தேர் கொட்டகை மற்றும் கதவுகள் அமைக்கப்பட்டன.
 • ஆலய உள்வீதி தெற்கு பக்கமாக புதிதாக தூண்கள் அமைக்கப்பட்டு பிள்ளையார் பரிகாரம் வரை கொட்டகை அமைக்கப்பட்டது. 
 • உள்வீதி வசந்த மண்டப முன்பகுதி தூண்கள் அமைக்கபட்டு கொட்டகை வேலை மற்றும்  சீமேந்து நிலம் அமைக்கபட்டது.

 • தெற்கு வெளி வாயில் கொட்டகைக்கான தூண்கள் அமைக்கப்பட்டது.
 • உள்வீதி வடக்கு நவக்கிரகம் அமைந்த பகுதி தூண்கள் அமைக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டது.
 • ஆலயம் வர்ணம் பூசப்பட்டு 2010 மகா கும்பாவிஷேகம் செய்யப்பட்டது.

2010 ஆம் ஆண்டின்  பின்னரான காலபகுதியில் ஆலயத்தின் வளர்ச்சியிலே கொள்வனவுகள் மற்றும் கட்டிட வேலைகள் இடம் பெற்றுள்ளன

 • ஆலய கொடிமரம் கொடிமர கவசம் தேர் கயிறுகள் சிம்மாசனம் சூரன் கிடாய்வாகனம் மின்சார உற்பத்தியாக்கி சண்டேஸ்வரா்ஐம்பொண் சிலை தளபாடங்கள் என்பனவும் இதில் அடங்கும்

 • இக்காலப்பகுதியிலே அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டது கோபுர வாயில் மண்டப நிலம் அமைக்கப்பட்டு இரும்பிலான கதவூகள் பொருத்தப்பட்டது.
 • ஆலய உள்வீதியில் தெற்கு மேற்கு கொட்டகை தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு பக்க சுவர்கள் உயர்த்தி பூசி வர்ணம் பூசப்பட்டது. 
 • ஆலய மண்டப சுவர்கள் முற்று முழுதாக உள்ளே வெளியே சீமேந்து பூசி வர்ணம் அடிக்கப்பட்டது.
 • இக்காலப் பகுதியில் தேர்முட்டி படிக்கட்டின் கொட்டகை வேலைக்காக நிதி  சேகரிக்கும் முயற்சியில் கிடைத்த நிதியில் தேவையான தீராந்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.  

சிறிது சிறிதாக நடைபெறும் ஆலய வேலைகளை வலுச்சேர்க்கும் முகமாக கிராம எழுச்சி “கம்பெரலிய” எனும் துரித கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் 400 000 ருபா பணம் ஒதுக்கப்பட் நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆலயத்தில் நீண்டகாலமாக குறையாக உள்ள உள்வீதி கொட்டகை வேலையை நிறைவூ செய்து வைக்க தேவையான நிதியை தங்களால் இயன்ற அளவூ வழங்கி எல்லாம் வல்ல சிவசுப்பிரமணிய சுவாமிகளின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

mukapuvajal

Post A Comment:

0 comments so far,add yours